Saturday, September 18, 2010

மண்ணிலே மழையென

பொன்னெழில் வெண்ணிலா பெண்ணாய்
என்னெதிர் வந்தனள் நீண்ட
கண்ணிலே காதலைக் கண்டேன்
என்னுயிர்த் தன்னையே தந்தேன்!

கண்வழி உயிரிடம் மாற
அன்பினால் மனங்கலந் திட்ட
பின்னரிவ் வெக்கமேன் பெண்ணே
மண்ணிலே மழையெனச் சேராய்!


விளம் விளம் தேமா =எனும் தளையமைப்பைக் கொண்ட வஞ்சிமண்டிலம். 

6 comments:

சிவா said...

தங்களின் கவிதைகள் தித்திக்கும் தேன்! படிக்க படிக்க இன்பமூட்டிகிறது!

ஆனால் எழுத்தின் வர்ணங்கள் மற்றும் பின்னணியுடன் இணையவில்லை! படிக்க மிகவும் சிரமமாக உள்ளது!

நன்றி!

அன்புடன் மலிக்கா said...

மண்ணிலே மழையென
மட மடவெனவே
மதுர கவிதை தந்தாய்.

வாழ்த்துக்கள் அமுதா..

agaramamuthan said...

அழகுடை வஞ்சி*யைத் தந்த
அழகுமா! உன்றனை வாழ்த்த
பழகுசெந் தமிழதன் சொற்கொண்(டு)
எழுதினேன் தோழிநீ வாழ்க!

வஞ்சி -வஞ்சிப்பா.

agaramamuthan said...

வலை காண அழகுடன் மிளிர்கிறது. வாழ்த்துக்கள். பழைய இடுகைகளின் எழுத்துக்கள் வண்ண எழுத்துக்களாக உள்ளதால் (பழைய இடுகைகள்) படிக்கக் கடினமாக உள்ளன.

உமா said...

அமுதா அவர்களுக்கு மிக்க நன்றி. நீண்ட நாட்களுக்குப் பின் வலைப்பக்கம் வந்ததும் தங்களின் வாழ்த்து மிக்க உற்ச்சாகத்தை அளிக்கிறது. மீண்டும் எழுதத்துவங்குகிறேன். நன்றி.

ஆமாம் முந்தய பதிவுகளை ஒவ்வொன்றாக மாற்றவேண்டியுள்ளது. எனக்கு அதற்கான நேரமில்லையாகையால் சற்று அப்படியே விட்டுவிட்டேன். முயன்று மாற்றிவிடுகிறேன்.

V.Rajalakshmi said...

சொல்லிக் கொள்ளாமலேயே
மெளனமாய்
தூரம்...மிகமிக தூரமாய்
உன்னைச் சுமந்த படி
வந்துவிட்டேன்.