சமீபத்தில் இல்லச் சுமையை இனிதாய் ஏற்றுக் கொண்ட
வெண்பா வலை நண்பர் திரு வசந்த குமாருக்கு!
சொல்வளர்ச் செல்வன் வசந்த குமாருடன்
சொல்லிற்ச் சுவையென சுந்தரி ஹேமலதா
இல்லறந் தன்னில் இணைந்திட்டார் வாழ்த்திடுவோம்
நல்லறங் காப்பீர் நயந்து.
முனைவர். திரு குணசீலன் அவர்களுக்கு
சொல்வளங் கொண்டத் தோழர் குணசீலன்
நல்லிணை யாக நங்கை அருணா
இல்லறம் இனிக்க இணைந்தார்
பல்வளம் பெருக
நல்லுளம் கொண்டோர் வாழ்த்த
நல்லன யாவும் நாளும் நிறைகவே!
2 comments:
வாழ்த்துகள்
/சுமை/ ???????????!!!!
பாக்கள் அருமை
நன்றி திகழ்.
Post a Comment