நல்லார் நெஞ்சில்
புல்மேல் பனியாய்
அல்லல் இருளை
கொல்லும் சுடரே
சுடரின் துணையொடு
படர்ந்திடு கொடிபோல்
இடர்தரு தொல்லை
கடந்திட அருள்செய்
செய்வதைத் துணிந்து
பொய்யதை நீக்கி
உய்ந்திட எனக்கே
மெய்யதைக் காட்டு
காட்டில் வழியே
பாட்டின் பொருளே
மீட்டும் இசையில்
கூட்டுக் கலையே
கலையே அழகே
விலையில் மணியே
மலையென புவியில்
நிலைத்தநற் தமிழே
தமிழே அமிழ்தாம்
தமிழர் உணர்வீர்
உமியை தவிர்த்துநற்
தமிழ்பா தருவீர்.
2 comments:
/// செய்வதைத் துணிந்து
பொய்யதை நீக்கி
உய்ந்திட எனக்கே
மெய்யதைக் காட்டு ///
சிறப்பான வரிகள் பல... வாழ்த்துக்கள் சகோதரி...
தொடர்ந்து என் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் திரு தனபாலன் அவர்களுக்கு என் நன்றி. தொடர்வோம்.
Post a Comment