Monday, June 26, 2006

கையில் கொழுக்கட்டை
கண்ணிரண்டில்
கருனை வெள்ளம்
கழலனிந்த
காலிரண்டில்
கருத்தைப் பதித்தோர்க்கு
துந்திக்கைக் கொண்டு
நம்பிக்கையூட்டும்
நாயகனே!

பருத்த தொந்தியும்
பால் கொழுக்கட்டையும்
பிடித்த பிள்ளைக்க்கு
இனித்த மனத்தோடு
இலையாக காயாக
பூவாக கனியாக
இன்னும்
யாராக காணிடினும்
யாவர்க்குமானவனே
ஞானமே வடிவான
நாயகனே!
வினாயகனே!

நானும் உனை போற்றுகின்றேன்
நலம் தருவாய்
எழில் மிகு
தமிழன்னை
கரம் பற்றி
நான் போகும் பாதையிலே
ஞான ஒளி காட்டிடுவாய்
ஏற்றிடுவாய் எம்மை
இதயத்தே நீயிருந்து...

1 comment:

புரவி said...

விநாயகன் எப்போதும் உங்களுக்கு அருள்புரிவான்,

வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,
வளர் நிலை கவிதை புனைவோன்
(raamu.ravi@gmail.com)