Friday, June 30, 2006

நானும் நீயும்

* புத்தகச் சாலை
சொர்கத்தின் வாசல் எனக்கு
உனக்கோ
திக்கு தெரியாத காடு

* கதை கவிதை
கரும்பெனக்கு
கானல் நீருனக்கு

* எழுத்தெனக்கு
இதயத்தின் பக்கத்தில்
எழுதும் முறைமறந்து
`தட்டித் தட்டியே`
பழகிவிட்ட உன்
கைகளுக்கு
`ஃபைல்` களின் பக்கங்களை
`க்ளிக்` கத்தான் தெரியும்,
பக்கங்களின் புரட்டல்களில்
பித்தானவள் நான்.
* இரவில் நிலவில்
இருளின் ஒளியில்
நெருப்பு பந்தங்களில்
விழி தீண்டி
நானிருக்க
இதமான குளிரில்
இமை மூடி தூங்கிவிட்டாய்
நீ...
* கதம்ப மாலைப் போல்
எதிர்மறையாகவே
பிணைந்திருக்கின்றோம்
இருப்போம்
மாறுபட்ட வண்ணங்கள்
குழைந்தால்
புதுப்புது எண்ணங்கள்
சாத்தியமே!...

3 comments:

Anonymous said...

வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்...

Pradeep said...

ARumaiyaga ullathu. enakku migavum piditha kavithai ithu.

su.sivaa said...

கவிதை நன்றாக இருக்கிறது, தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.