Sunday, August 09, 2009

இன்பமும் துன்பமும்

காலை மலரும் மலர்கள் உலர்ந்தவையே
மாலையில் வீழ்ந்திடும்,வாழ்வெனுஞ் சோலையில்
என்று மதுபோல் இரண்டறச்சேர்ந் தேயிருக்கும்
இன்பமுந் துன்பமு மே.

[பாரசீக கவிஞர். உமர்கய்யாம் பாடல்களை படித்ததின் தாக்கம்]
விளக்கம்: காலையில் மலரும் மலர்கள் மாலையானல் உதிர்ந்து வாடிவிடும்,ஆனாலும் காலையி்ல் மீண்டும் மலர்கள் மலரும். அதுபோல் மனிதன் வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறிமாறியே தோன்றும். எதுவும் நிலையானதல்ல என்பதால் இன்பத்தில் இறுமாப்படைவதும் துயரில் துவண்டுவிடுதலும் கூடாது. சமமாக பாவித்தால் நிம்மதி இருக்கும்.

4 comments:

தமிழ் said...

மணம்வீசும் பூக்களைப் பாருங்கள் மாலையில்
மண்ணில் மரித்தாலும் கண்ணில் கவலையைக்
காட்டுவ தில்லை மனிதா இதைப்புரிந்தால்
மாட்டுமே வாழ்க்கைவிருந் து.

இப்பொழுது தான் இந்த வரிகளை எழுதிவிட்டுப் பார்த்தால்
தங்களின் வெண்பா

ஆ.ஞானசேகரன் said...

உண்மையில் விளக்கத்தை படித்துவிட்டு மறுபடியும் வெண்பாவை படிக்கும்பொழுது அமுதம் சொட்டுகின்றது

உமா said...

திகழ், great men think alike. அதுதான். உண்மையாகவே இது ஒர் நல்ல அரிய நிகழ்வு. வெண்பா அருமை வாழ்த்துக்கள்.
அன்புடன் உமா.

உமா said...

திரு. ஞானசேகரன் மிக்க நன்றி. தங்களின் ஆலோசனையினாலேயே விளக்கம் கொடுக்க ஆரம்பித்துள்ளேன். மீண்டும் நன்றி. உங்கள் பின்னூட்டங்கள் எனக்கு மிக் மிக உற்சாகமூட்டுகின்றன.