Monday, August 10, 2009

'பன்றிக் காய்சல்

பாராய் பரவுமிப் பன்றிக்காய்ச் சல்பாரில்;
தீரா சுரத்தோடு மூச்சடைப்பு - ஆறா
இருமல் சளியென்(று) இவையும் இருந்தால்
மருத்துவ ரைப்பார் விரைந்து.

தொட்டால் பரவுமிது என்பத னால்சற்றே
டெட்டாலிட்(டு) உங்கைக் கழுவு

உன்னால் பரவுதல் வேண்டாயிந் நோய்யிங்கு
என்றால், முகத்தை முகமூடி தன்னால்
கவனமாய் மூடி மருத்து வரைப்பார்
அவரையுங் கொல்லாதே சேர்த்து.

பயந்தால் போகுமோ? பீதி பரப்பும்;
தயவோடு செய்வீர் இதைத்தடுக்க - நோயால்
பாதிக்கப் பட்டிருந்தால் சேராதீர் யாருடனும்
சோதித் தறிவீர் உடன்.


[பயத்தால் பீதியடைந்து மருத்துவமனைக்கு அனைவரும் ஒரே நேரத்தில் செல்வோமானால் அங்கு ஒருவருக்கிருந்தாலும் எல்லோருக்கும் உடனே பரவும். நோயைக் கூட்டிக்கொண்டு வந்துவிடுவோம். எனவே முகமூடியிட்டு அரசு பரிந்துரைத்துள்ள இடங்களில் நோய் இருக்கலாம் என் உங்கள் மருத்துவர் சந்தேகித்து பரிந்துரைத்தால் மட்டும் பரிசோதனைச் செய்து கொள்ள வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்காமல் மாத்திரையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.பக்க விளைவுகள் மிக அதிகமாய் இருக்கும்.]

சர்க்கரை ஆஸ்துமாவோ(டு) இரத்த அழுத்தமென்றால்
அக்கரை வேண்டும் அதிகமாய் எக்கணமும்
சின்னஞ் சிருவர் பெரியோர் தமைசற்றே
கண்ணுங் கருத்துமாய் கா.



3 comments:

ஆ.ஞானசேகரன் said...

//முகமூடியிட்டு அரசு பரிந்துரைத்துள்ள இடங்களில் பரிசோதனைச் செய்து கொள்ள வேண்டும்.//

நல்லதொரு பதிவை கவிதையாய், வெண்பாவாய் வடித்துவிடீர்கள் பாராட்டுகள்

அகரம் அமுதா said...

பன்றிக்காய்ச் சல்பற்றிப் பற்பலவாய்ப் பாத்தன்னில்
நன்றிக்காய்ச் சல்பற்றி நாட்டினீர் -கொன்றிக்காய்ச்
சல்நம் குலமழிக்கும் தாக்குமுன்ம ருந்துமனைச்
செல்நன்றென் றார்த்தீர் சிறந்து!

க.பாலாசி said...

//சர்க்கரை ஆஸ்துமாவோ(டு) இரத்த அழுத்தமென்றால்
அக்கரை வேண்டும் அதிகமாய் எக்கணமும்
சின்னஞ் சிருவர் பெரியோர் தமைசற்றே
கண்ணுங் கருத்துமாய் கா.//

நன்றி தோழியே.

தங்களின் அறிவுரை மிகவும் பயணுள்ளதாக உள்ளது. நன்றி.