Friday, April 09, 2010

என் இனிய தமிழ் மொழியே!





என் இனிய மொழியே

என் இதயத்தின் ஒலியே


நீ

நோஞ்சான் குழந்தையாக உள்ளாய்...

உனக்கு

அதிகமான

கவனிப்புத் தேவைபடுகிறது


நீ
நோஞ்சான் குழந்தையாக உள்ளாய்...

எல்லோரும் உன்னைக் கடந்து

சென்றுவிடுகிறார்கள்


உன் சிறந்த சொற்களை

நீ

சுவைப்பதில்லை

வேற்று மொழி

மருந்திலேயே

வீக்கம் கொள்கிறாய்


அசைப் போடுவதே

உன்

அன்றாட வேலையாகிவிட்டது


முன் பிறந்தும்

நீ முடமாகிக் கிடக்கிறாய்

பின்னவள் ஹிந்தியோ

பெரியவளாகிப் போனாள்


நீ முடமாகிக் கிடக்கிறாய்

ஊனமுற்றவர்

ஓட்டப் பந்தயத்தில் மட்டும்

முதல் பரிசு

உனக்கு


ஊனம்

உன்னில் இல்லை

உன்னைச் சுமந்தவர்

நெஞ்சில்


கன்னித் தமிழே

கவிதைச் சோலையில்

கதையில்

காணும் நாடகத்தில்

உன்

புன்னகையே

உன் இதழ்களை

அலங்கரிக்கட்டும்


அந்நிய சாயப் பூச்சு

வேண்டாம்

சொந்தப் பூவையேச்

சூடிக்கொள்


வண்ணங்கள் கலக்கலாம்

எண்ணங்கள் கலக்கலாம்


உன் சுவடுகள்

கலைக்கப்படாமல்

காப்பாற்று...

11 comments:

இனியன் பாலாஜி said...

அடேங்கப்பா
கலக்கறீங்க உமா
இப்போதான் உங்க பக்கத்துக்கு வந்தேன்.
மிகவும் அருமை போங்கள்
இன்னும் உங்களது மற்ற மரபுக் கவிதைகளை
ப்டிக்க ஆரம்பிக்கவில்லை. மன்னிக்கவும் . படித்ததும்
பின்னூட்டம் இடுகிறேன்.
தமிழைப் பொறுத்தவரை உங்களை நான் குருவாக
ஏற்றுக் கொண்டேன்.
நன்றி
இனியன் பாலாஜி

இனியன் பாலாஜி said...

அடேங்கப்பா
கலக்கறீங்க உமா
இப்போதான் உங்க பக்கத்துக்கு வந்தேன்.
மிகவும் அருமை போங்கள்
இன்னும் உங்களது மற்ற மரபுக் கவிதைகளை
ப்டிக்க ஆரம்பிக்கவில்லை. மன்னிக்கவும் . படித்ததும்
பின்னூட்டம் இடுகிறேன்.
தமிழைப் பொறுத்தவரை உங்களை நான் குருவாக
ஏற்றுக் கொண்டேன்.
நன்றி
இனியன் பாலாஜி

தமிழ் said...

/நீ முடமாகிக் கிடக்கிறாய்
ஊனமுற்றவர்
ஓட்டப் பந்தயத்தில் மட்டும்
முதல் பரிசு
உனக்கு/

உண்மை தான்

உமா said...

வணக்கம் திரு.இனியன் பாலாஜி.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
தாங்கள் தங்கள் ஜோதிடம் பற்றிய வலையில் கூறியிருப்பது போல் தமிழும் ஒரு கடல் அதன் ஒருத்துளியைக் கையில் வைத்து வியந்துக்கொண்டிருக்கிறேன். குரு என்ற சொல்லுக்கு அர்த்தமாக விளங்குபவர்கள் திரு. தமிழநம்பி அவர்களும் திரு.அகரம் அமுதா அவர்களும். வெண்பா எழுதலாம் வாங்க பதிவிற்கு தாங்களும் வந்து தமிழின் இனிமையைச் சுவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என் பாக்களைப் படித்து பின்னூட்டமிட்டால் எனக்கு மிகவும் ஊக்கமளிப்பதாயிருக்கும். நன்றி.

உமா said...

திகழ் மிக்க நன்றி.

Anonymous said...

கவிதை நன்று தோழி ..தமிழ் தமிழனாலேயே தடுமாறிக்கொண்டிருக்கிறது..அருமையாய் சொன்னீர்கள்..
ஓவிய நாட்டம் உள்ளவர் என்று சொல்லி இருக்கிறீர்கள்..தொடர்ந்து முயற்சியுங்கள்..எளிமையான ஒன்றுதான்.உங்கள் ஓவிய முயற்சிக்கு என்னாலான உதவியை செய்கிறேன்.

Anonymous said...

கவிதை நன்று தோழி ..தமிழ் தமிழனாலேயே தடுமாறிக்கொண்டிருக்கிறது..அருமையாய் சொன்னீர்கள்..
ஓவிய நாட்டம் உள்ளவர் என்று சொல்லி இருக்கிறீர்கள்..தொடர்ந்து முயற்சியுங்கள்..எளிமையான ஒன்றுதான்.உங்கள் ஓவிய முயற்சிக்கு என்னாலான உதவியை செய்கிறேன்.

உமா said...

திரு. படைப்பாளி அவர்களுக்கு
வருகைக்கும், வாழ்த்துக்கும்,வழிகாட்டலுக்கும் மிக்க நன்றி.

tamil astrology said...

ஊனம்
உன்னில் இல்லை
உன்னைச் சுமந்தவர்
நெஞ்சில்
இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

லெமூரியன்... said...

வணக்கம் தோழர்
எத்தோச்சையா தான் உங்க வலைப் பூவின் பக்கம் ஒதுங்கினேன்....
மலைத்து போய் விட்டேன்...
வாழ்த்துக்கள்....
இனி உங்களை பின்தொடர்வேன்...

உமா said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி திரு.லெமூரியன். தொடர்வோம்.
அன்புடன் உமா.