Wednesday, August 05, 2009

கோமணம்.

கோமணம் என்ற சொல்லுக்காக எழுதியது.

அறுசுவையுண் டிக்கோ மணம்நாவுக் கோமணம்
காற்றுக்கோ மணம்நாசிக் கோமன மாசைத்
துடைத்தொரு கோமணங்கட் டும்ரமண ருக்கோ
மணமுண் டறிவாய் மதி.

ஐம்புலங்களால் நாமுணர்வதெல்லாம் உண்மையானதலல,ரமணர் காட்டும் உண்மை பொருளுக்கே உண்மையான மணமுண்டு.

திரு.அவனடிமையார் இன்னும் அழகாக விளக்கமளித்துள்ளார். அவர் சொல்லிலேயே,' சடலத்துக்கு இல்லாத மணத்தை,உறங்கும் போது உயிர்த்திருந்தும், புலனுறுப்புக்கள் இருந்தும் அறியாத மணத்தை,விழித்ததும் எப்படி அறிகிறோம்? உள்ளே 'நான்' எனும் உணர்வாக ஒளிரும் பகவானுக்கே மணம்'


2 comments:

ஆ.ஞானசேகரன் said...

கொஞ்சம் புரிந்தது போல இருக்குங்க உமா...

உமா said...

வருகைக்கு நன்றி ஞானசேகரன். கொஞ்சம் ஆன்மீகம் அவ்வளவுதான். எது நிரந்தரமானது. இவ்வுலகில் நாமுணரும் இன்ப துன்பமெல்லாம் நிரந்தரமானதல்ல். நம்முள் 'நான்' எனும் உணர்வாக ஒளிரும் பகவானுக்கே மணம்'