வெக்கம் இதுவெக்கம் வெம்பசியால் புல்தின்னும்மக்கள் ஒருபக்கம், வற்றியுடல் சக்கையாய்
கண்ணில் தெரியும் குழந்தை களொருபக்கம்;
விண்தொடும் வீடு வசதியாய் வாகனம்
மண்ணின் மறுபக்கம் வண்ணமிகு வாழ்க்கையதில்
சன்னல் கதவுக்கும் சீலை.
[புகைப்படம் திரு ஞானசேகரனின் 'அம்மா அப்பா' விலிருந்து]

